விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

உலகிலேயே மிகச்சிறிய குரங்கு! ஆச்சரியமான உண்மை

27 September, 2022, Tue 13:10   |  views: 5709

 உலகிலேயே மிகவும் சிறிய குரங்கு இனமான, பிக்மி மார்மோசெட் (pygmy marmoset) எனப்படும் செபுல்லா இனம் கண்டறியப்பட்டுள்ளது. 

 
தென் அமெரிக்காவின் மேற்கு அமேசான் படுகையில் உள்ள மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை இந்த குரங்கினம். இவை பிரேசில், கம்போடியா மற்றும் பெரு நாட்டிலும் காணப்படுகிறது.
 
இவை சுமார் 11 முதல் 15 சென்ரிமீற்றர் உயரமே வளரும். இதன் உடலை விட வாலின் நீளம் அதிகம். அதாவது இந்த குரங்கின் வால் சுமார் 17 முதல் 22 சென்ரிமீற்றர் நீளம் வரை இருக்கும். அதிகபட்சமாக 100 கிராம் முதல் 120 கிராம் வரையான எடையில் காணப்படும் இந்த குரங்கு, பிறக்கும்போது வெறும் 15 கிராம் எடை மட்டுமே இருக்கும். இதன் ஆயுட்காலம் 11 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
 
 

 
இந்த செபுல்லா குரங்கினம், பசுமையான மற்றும் ஆற்றின் விளிம்பு காடுகளில் காணப்படும். பசுமையான காடுகளில் உள்ள மரங்களில் உள்ள பசைகளையும், கரையான் போன்ற சிறிய பூச்சிகளையும் சாப்பிடும். 
 
இந்த குரங்கில் 83%, இரண்டு முதல் 9 பேர்களைக் கொண்ட குழுவாக வாழும். அதில் ஆதிக்கம் செலுத்தும் ஆண், இனப்பெருக்கம் செய்யும் பெண், நான்கு வரையான குட்டிகள் இடம்பெற்றிருக்கும். ஒருசில குழுவில் வயதான குரங்குகளும் இருக்கும். பெண் குரங்கானது வருடத்திற்கு இரண்டு முறை இரண்டு குட்டிகளைப் பிரசவிக்கின்றன.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18