விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பன்னீர் மசாலா!

29 November, 2022, Tue 16:53   |  views: 5282

 இந்த பன்னீர் மசாலாவானது சப்பாத்தி , இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளுக்கு சுவையான கறியாக இருக்கும்.

 
பன்னீரை அதிகம் உணவில் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான கல்சியம், புரோட்டீன் போன்றவை அதிகம் கிடைக்கின்றன.அத்தோடு பன்னீரில் உள்ள கல்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகின்றது.
 
தேவையான பொருட்கள் -
 
பன்னீர் - 300 கிராம் 
வெங்காயம் - 2 
தக்காளி - 6 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி 
சீரக தூள் - 1 தேக்கரண்டி 
கடலை மா - 2 தேக்கரண்டி 
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி 
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி 
சர்க்கரை - 1 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 5 
இஞ்சி நீளவாக்கில் - சிறிய துண்டு 
கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு, நெய், எண்ணெய் - தேவைக்கேற்ப , 
தாளிக்க - பட்டை ,கராம்பு,பச்சைஏலக்காய் ,கருப்பு ஏலக்காய் ,அன்னாசி பூ ,பிரியாணி இலை ,
 
செய்முறை: பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
 
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
 
பாத்திரத்தில் நறுக்கிய பன்னீரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் நெய்யில் வறுத்து கொள்ளவும்.
 
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கடலை மா, உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
 
பின்பு அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போய் சுருண்டு வரும் வரை வதக்கவும்.
 
அடுத்து அதில் தயிர், கரம் மசாலா தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
 
அடுத்து மசாலாவில் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
 
கடைசியாக வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்

நாட்டு கோழி குருமா

6 February, 2023, Mon 4:06   |  views: 745

காலிப்ளவர் பகோடா

31 January, 2023, Tue 14:42   |  views: 1995

சேமியா இட்லி

24 January, 2023, Tue 14:11   |  views: 1726

ப்ரோக்கோலி பொரியல்

22 January, 2023, Sun 5:34   |  views: 2078

மசால் வடை

14 January, 2023, Sat 3:53   |  views: 3490
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18