எழுத்துரு விளம்பரம் - Text Pub

11 நாட்கள் விடாமல் பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை..!

7 January, 2023, Sat 12:56   |  views: 6604

11 நாட்கள் தொடர்ந்து பறந்து கின்னஸ் சாதனை படைத்த பார்-டெயில் காட்விட் பறவை. 

 
வட அமெரிக்க மேற்கு பகுதியில் உள்ள அலாஸ்காவில் பார்-டெயில் காட்விட் என்ற பறவை இனம் உள்ளது. இந்த பறவை இனம், குளிர் காலங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.
 
இந்த பறவை மற்ற பறவையினங்கள் போல, அடிக்கடி ஓய்வெடுக்காது, அதேபோல இது எப்போதாவது தான் தரையிறங்கும். அதே வேலை இது தரையிறங்கினாலும் தண்ணீர் இருக்கும் இடங்களில் தரையிறங்காது. ஏனென்றால் இதன் உடல் அமைப்பு தண்ணீரில் மிதப்பதற்கு ஏற்றவாறு இருப்பதில்லை. அதையும் மீறி தெரியாமல் கூட தண்ணீரில் விழுந்தால் பறவைக்கு இறப்பு தான் நேரிடும். இதனால் தான் இப்பறவை நீண்ட தூரம் நிற்காமலேயே பறக்கும்.
 
இந்த  நிலையில்,234684 என்ற டேக் எண் மூலம் அறியப்படும் பார்-டெயில்ட் காட்விட், அலாஸ்காவிலிருந்து ஆஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர்கள் உணவின்றி, ஓய்வின்றி 11 நாட்கள் தொடர்ந்து பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
 
இதே இனத்தை சேர்ந்த மற்றொரு பறவை கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த சாதனையை செய்த நிலையில், அந்த சாதனையை தற்போது இப்பறவை முறியடித்துள்ளது. இரவு பகலாக பறவை பயணம் மேற்கொண்டதன் காரணமாக அதன் உடல் எடை பாதிக்கு மேல் குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18