எழுத்துரு விளம்பரம் - Text Pub

மனித மலத்தை முகர்ந்து பார்க்கும் வேலை! சம்பளம் எவ்வளவு தெரியுமா...?

14 March, 2023, Tue 11:07   |  views: 6461

லண்டனை சேர்ந்த சுகாதார நிறுவனம் மனித மலத்தை முகர்ந்து பார்க்கும் வேலைக்கு ஆள் தேடி வருகிறது
 
மலத்தை முகர்ந்து பார்க்கும் ஒரு எக்ஸ்பர்ட்டை தேடி வருகிறது யூ.கே.வை சேர்ந்த ஃபீல் கம்ப்லீட் என்ற நிறுவனம்.
 
குடல் ஆரோக்கிய ஆலோசனை சேவை நிறுவனமான ஃபீல் கம்ப்லீட், இந்த பணியில் சேருபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் மாதச் சம்பளமாக (1500 யூரோ) வழங்கவுள்ளது.
 
இந்நிலையில் "பூம்மெலியர்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பதவிக்கான ஆள் தேடல் நடைப்பெற்று வருகிறது. 
 
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும்.
 
மார்ச் 2023 இல் தொடங்கும் முதல் பூம்மேலியர் பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது குடல் ஆரோக்கியம், மனிதர்கள் தங்கள் உணவு பழக்கத்தில் மேற்கொண்டுள்ள மாற்றத்தால் உடலளவில் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
குடலிலுள்ள பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை சமபாடு அடையச் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. 
 
நாம் உட்கொள்ளும் உணவு சரியாக செரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கவேண்டும். தேவையற்ற ஊட்டச்சத்து கழிவுகளாக முறையாக உடலில் இருந்து வெளியேற வேண்டும்.
 
இந்த சீரான செயல்முறைய பாதிக்கும்பொழுது உடல்நலக் குறைவு வரலாம். மனித மலத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், மலத்தின் நிறம், வடிவம் மற்றும் அமைப்பு ஆகியவை உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.
 
முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் ஹான்னா மெக்கே கூறுகையில், "யாருடைய மலமும் வாசனையோடு இருக்காது. 
 
எனினும், துர்நாற்றம் அதிகாமாக வெளியாகும் மலம் மொசமான குடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது" என்றார்.
 
டிஸ்பயாசிஸ் எனப்படும் குடல் பாக்டீரியாவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு, நம் உடலில் அதிக அளவில் மீத்தேன் வாயு உருவாக வழிவகுத்து, இந்த துர்நாற்றத்தை தூண்டலாம்.
 
இதற்கு அழற்சிகளும் முக்கிய காரணமாகும். அந்த சமயங்களில் மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
மேலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18