Paristamil Navigation Paristamil advert login

தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளவது எப்படி?

தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளவது  எப்படி?

21 பங்குனி 2024 வியாழன் 14:18 | பார்வைகள் : 806


தோல்வியே வெற்றிக்கான முதல் படிக்கட்டு என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்திக்கிறார்கள். இந்த தோல்விகள் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன. அதேபோல தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு எப்படி கற்றுக் கொடுப்பது என்பதை குறித்து பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியம். 

ஒருவேளை தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப்பது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களுக்கான கட்டுரை தான் இது. வாங்க இப்போது அதை பற்றி இங்கு பார்ப்போம்.

இன்னொரு வாய்ப்பு: வளர்ச்சியை நோக்கி படிக்கட்டுகளை எடுக்க குழந்தைகளை ஊக்குவிக்க மறக்காதீர்கள். அதுபோல, எதையும் முயற்சிக்க தோல்வி மற்றொரு வாய்ப்பாக இருக்கும் என்பதை சொல்லிக் கொடுங்கள். தோல்வியை நினைத்து அழுவதை விட தோல்வியை அலசுவதும் தவறை உணர்ந்து முன்னேறுவது முக்கியம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

தோல்விகள் இயற்கையானது: எல்லோருக்கும் தோல்வியை அனுபவிக்கிறார்கள் என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்க்கையில் தோல்வி சகஜம் என்பதையும் புரிய வையுங்கள். உலகில் வெற்றி பெற்ற பலர் பல தோல்விகளை சந்தித்துள்ளனர் என்பதை உதாரணங்களுடன் அவர்களுக்கு விளக்கவும்.

ஆக்கபூர்வமான ஆலோசனை: தோல்வியை சந்திக்கும்போது தோல்வியை எப்படி ஏற்றுக் கொள்வது என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தையின் தோல்விக்கு அவரை குற்றம் கூறாதீர்கள். அதற்கு பதிலாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள். இது அவரது முயற்சிகளை மேலும் தொடர தூண்டுகிறது.

நிலைத்தன்மை: தடைகளை கடக்கவும், தோல்வியை சந்திக்கவும் உத்வேகத்துடன் நிற்கவும் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குங்கள். குறிப்பாக அவர்களின் நிலத்தன்மை எவ்வாறு பராமரிப்பது என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

சுதந்திரமாக சிந்திக்கட்டும்: குழந்தைகள் சுதந்திரமாக சவால்களை ஏற்றுக்கொள்ளட்டும். அதேவேளையில், உங்கள் ஆதரவும் அவர்களுக்கு மிகவும் அவசியம். தோல்வியில் இருந்து கற்றுக் கொள்வதில் தோல்வியும் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பது குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.

சிக்கல் தீர்க்கும் திறன்: சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்க்க குழந்தைகளை ஊக்குவிக்க மறக்காதீர்கள்..மேலும் உங்கள் பிள்ளைகள் எங்கே தவறு செய்தார் என்பது ஆராய்ந்து அடுத்த முறை எப்படி சரியான படி எடுத்து வைப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அது போலவே அவர்களும் சிந்திக்கட்டும்.

முன்மாதிரியாக இருங்கள்: நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருங்கள். ஏனென்றால், குழந்தைகள் பெற்றோரைப் பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே, பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது அதை எப்படி ஏற்றுக் கொள்வது எப்படி பாடம் கற்பிப்பது என்று ஒரு மாதிரியாக நீங்கள் அவர்களுக்கு இருங்கள்.

முயற்சியைக் கொண்டாடுகள்: குழந்தைகளின் முயற்சியில் எதிர்ப்பார்த்த பலன் கிடைக்காவிட்டாலும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரித்துக் கொண்டாடுங்கள். உங்களின் இந்த நடவடிக்கையால் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்