Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய மொஸ்கோ இசைநிகழ்வு

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய மொஸ்கோ இசைநிகழ்வு

26 பங்குனி 2024 செவ்வாய் 09:27 | பார்வைகள் : 446


இரவு 8 மணியாவதற்கு  சில நிமிடங்களிற்கு முன்னர் குரோகஸ் நகர மண்டபத்திற்கு பொதுமக்கள் பெருமளவிற்கு வரத்தொடங்கியிருந்தனர். அன்றிரவு பிக்னிக் என்ற இசைகுழுவின் நிகழ்வு இடம்பெறவிருந்தது.

சிலர்  பிறவுண்நிற ஆடையில் காணப்பட்டனர் அவர்கள் இராணுவத்தினரா பயங்கரவாதிகளா பொதுமக்களா எனத்தெரியவில்லை  வாயில்கதவகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அவர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என்கின்றார் புகைப்படப்பிடிப்பாளர் டேவோ பிரிமோவ்.

அவர் பல்கனியிலிருந்து இந்த தாக்குதலை பார்த்துக்கொண்டிருந்தார்.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் அரங்கிற்கு வெளியே உள்ள பகுதி ஊடாக நடந்துசென்றனர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தனர் பொதுமக்களை கொன்றனர் காயப்படுத்தினர்.

அந்த இசைநிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக 6200 பேர் நுழைவுச்சீட்டை வாங்கியிருந்தனர் 

தாக்குதல் ஆரம்பித்ததும் அந்த அரங்கின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தப்பியோட தொடங்கினர் நான்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் ஒருவர் தனது சகாக்கள் விளம்பர பலகையின் பின்னால் மறைந்திருந்தனர் என தெரிவித்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் எங்களை கடந்துசென்றனர் பொதுமக்கள் மீது அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்ய தொடங்கினார்கள் என அவர் தெரிவித்தார்.

இ;ந்த தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது எவருக்கும் தெரியாது ஆனால் மேல் தளத்திலிருந்து படமாக்கப்பட்ட வீடியோ நான்கு பேரை காண்பித்துள்ளது.அவர்கள் தனித்தனியாக நடந்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர்.

அச்சத்துடன் ஜன்னல்கள் மத்தியில் மறைந்திருந்த பொதுமக்கள் மீது  தாக்குதல் குழுவின் தலைவர் குறிபார்த்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்.பலவருடங்களின் பின்னர் ரஸ்யாவில் இடம்பெற்ற மிகப்பயங்கரமான தாக்குதலிற்கு  முதலில் பலியானவர்கள் இவர்களே .

மொஸ்கோவின் வடபகுதியில் உள்ள கிம்கி போன்ற பகுதிகளில் இருந்து இசைநிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்களே அதிகளவில் கொல்லப்பட்டனர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் மற்றுமொரு நபரும் முதல் நபருடன் இணைந்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் மூன்றாவதுநபர் முதுகுப்பையுடன் அமைதியாக அவர்களை பின்தொடர்ந்தார்.நான்காவது நபர் அவரிடம் துப்பாக்கியை கொடுத்தார் அவர்கள் பாதுகாக்கப்படாத மெட்டல் டிடெக்டர்கள் ஊடாக அரங்கிற்குள் நுழைந்தனர்.

நுழைவாயிலின் அருகில் தனது 11 வயது மகளுக்கு ஐஸ்கிறீம் வாங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவர் யாரோ நிலத்தில் விழுந்து படுங்கள் என அலறியதை கேட்டார்.நாங்கள் பிள்ளைகள் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்நிலத்தில் விழுந்து படுத்தோம் மேசைகள் கதிரைகளுக்குள் மறைந்துகொண்டோம் காயமடைந்த பலர் எங்களை நோக்கி ஒடிவந்தனர் எனஅவர் ரஸ்ய மொழியில் பிபிசியிடம் தெரிவித்தார்.

அரங்கிற்குள் உள்ளே இசை நிகழ்ச்சி சில நிமிடங்களில் ஆரம்பிக்கவிருந்ததால் வெளியே கேட்கும் சத்தங்கள் அது தொடர்பானவை என சிலர் கருதினர்.

தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது நான் திரும்பி திரும்பி பார்த்தேன் மூன்றாவது தடவையே அரங்கிலிருந்த அனைவரும் சிதறி ஓடுகின்றனர் என்பதை உணர்ந்தேன் என தெரிவித்தார்சோஃபிகோ க்விரிகாஷ்விலி

பதற்றமான நிலை காணப்பட்டது என்கின்றார்புகைப்படப்பிடிப்பாளர்டேவ் ப்ரிமோவ் 

அரங்கிலிருந்த சிலர் கதிரைகளுக்குள் மறைந்திருக்க முயன்றனர் ஆனால் பல திசைகளிலும் இருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கதிரைகளுக்குள் மறைந்திருப்பது பாதுகாப்பானதாகயிருக்கவில்லை.

சிலர் அரங்கை நோக்கி ஒடினார்கள் சிலர் மேடையில் உயரமான இடங்களிற்கு சென்று வெளியே செல்ல முயன்றார்கள் ஆனால் வெளியே செல்லும் வாயில்கள் மூடப்பட்டிருந்தன.

மேடைக்கு தப்பியோடி பெண் அரங்கிலிருந்து சிறிய விற்பனை காட்சி கூடங்களில் காணப்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதை பார்த்தார்.

நாங்கள் திரைச்சீலைகளுக்கு பின்னால் மறைந்திருந்தோம் சீருடை அணிந்திருந்த  ஊழியர் எங்களை ஓடசொன்னார் நாங்கள் குளிர்கால ஆடைகள் இன்றி வாகனதரிப்பிடத்தை நோக்கி ஓடினோம் என அந்த பெண் தெரிவித்தார்.

பட்டாசு சத்தம் தான் கேட்கின்றது என நினைத்தேன் பின்னர் அவை தொடர்ச்சியாக வெடிக்க தொடங்கின நானும் எனது கணவரும் அவை துப்பாக்கிபிரயோகம் என்பதை உணர்ந்துகொண்டோம் என தெரிவித்தார் மார்கரிட்டா புனோவா .யாரோ கீழே ஓடுங்கள் என தெரிவித்தார்கள் முழுமையான இருட்டாக காணப்பட்டது நாங்கள் வெளியே வந்தவேளை எங்களின் பின்னால் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டன என அவர் தெரிவித்தார்.

முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் காணப்பட்ட ஒருவர் எப்படி தாங்களை பாதுகாத்துக்கொண்டோம் எனவும் அரங்கிலிருந்து எப்படி புகைமண்டலம் வெளிவந்தது எனவும் தெரிவித்தார்.

தாக்குதல் இடம்பெறுவதை பல்கனியிலிருந்து பார்த்ததாக ஒருவர்தெரிவித்தார்-அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள் அனைத்தும் தீப்பிடிக்க தொடங்கியதுஎன அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோல் குண்டாஅல்லது வேறு ஒரு பொருளா என்பது தெரியவில்லை ஆனால் அது உடனடியாக தீப்பிடித்தது.

உள்ளேயிருந்து தாக்குதல் தொடர்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தை நெருங்க முடியாத நிலை காணப்பட்டது கூரைக்கு பரவிய தீ பின்னர் கிராஸ்னோகோர்ஸ்க்கின் வான்வெளியில் தென்பட்டது.

தீயில்சிக்குண்ட கூரை எரிந்து விழுந்ததும் அந்த தீ கட்டிடத்தின் ஏனைய பகுதிகளிற்கும் பரவத்தொடங்கியது.


நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்