Paristamil Navigation Paristamil advert login

உலகின் மிக பெரிய பூனை இணையத்தில் வைரல்!

உலகின் மிக பெரிய  பூனை இணையத்தில் வைரல்!

6 ஆவணி 2023 ஞாயிறு 10:58 | பார்வைகள் : 3509


உலகில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் ஆகப் பெரிய பூனை வகைகளில் Maine Coon வகையும் ஒன்று.

ரஷ்யாவில் கெபிர் (Kefir) என்னும் Maine Coon வகைப் பூனை ஒன்று  உயரத்தால் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

யுலினா மினினா என்னும் பெண் வளர்க்கும் அந்தப் பூனை அவரின் 4 வயது மகளைப் போல் பெரியதாக இருக்கிறது.

அத்துடன் இரு கால்களில் நிற்கும் போது பூனை தனது மகளின் உயரத்தை எட்டுவதாக பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

4 வயது வரை வளரக்கூடிய அவை பொதுவாக 3 அடி எட்டலாம் என கூறப்படும்.

3 வயது கெபிர் இன்னும் வளரலாம் என்றும் மினானா கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்