Paristamil Navigation Paristamil advert login

வெந்தயம் தரும் ஆரோக்கியம்...!

வெந்தயம் தரும் ஆரோக்கியம்...!

4 பங்குனி 2024 திங்கள் 15:07 | பார்வைகள் : 1121


மூலிகைகள் பல நம் அன்றாட வாழ்வில் இடம்பெறுகின்றன.அதில் முக்கியமானது வெந்தயம்.வெந்தயம் நம் சமையலில் அன்றாடம்  சிறிதளவு சேர்த்துக் கொள்ளவேண்டிய ஒரு முக்கிய பொருள். வெந்தயத்தின் சுவை கசப்பாக இருந்தாலும், சிலவகையான குழம்பு வகைகளுக்கு, அதிக சுவை கூட்டுவதாக இது அமைகிறது.
இந்த சிறு வெந்தயமானது சுவைக்காக மட்டுமல்லாமல், பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது.
வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.இவ்வாறு ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தின் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

வயிற்றில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இரவில் 1 தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால்,அமிலத்தன்மை பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

நீரில் ஊற வைத்த வெந்தயம் கொழுப்பை குறைக்க உதவுகிறது.வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பைக் குறைத்து உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.

இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று சாப்பிட்டு ஒரு கப் அளவு குளிர்ந்த நீர் பருகி வந்தால்,ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும்.

முகப் பொலிவை மெருகேற்ற ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி வந்தால்,முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி சருமத்தை பொலிவுறச்செய்யும்.

ஊற வைத்த வெந்தயத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து மோருடன் சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும்.

இவ்வாறான பல மருத்துவ குணங்களை கொண்ட வெந்தயத்தை உட்கொண்டு,அதனால் கிடைக்கும் மருத்துவ பயன்களை பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்