Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து மீட்கப்படும் உடல்கள் - பிள்ளைகள் எங்கே என சொல்லுங்கள் - கதறும் உறவுகள்

இஸ்ரேலின் தாக்குதலில் சிக்கிய அல்ஸிபா மருத்துவனையிலிருந்து மீட்கப்படும் உடல்கள் - பிள்ளைகள் எங்கே என சொல்லுங்கள் - கதறும் உறவுகள்

13 சித்திரை 2024 சனி 14:03 | பார்வைகள் : 334


அல்சிபா மருத்துவமனையின் புதைகுழிகளில் காணப்பட்ட உடல்களை சுகாதார பணியாளர்கள் செவ்வாய்கிழமை தோண்டி எடுத்தனர்.

இரண்டுவார காலம் அந்த மருத்துவமனை இஸ்ரேலிய படையினரின் பிடியிலிருந்தவேளைநூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேலிய படையினர் அவர்களின் உடல்களை சிதைவடையவிட்டனர் என சுகாதார பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் ஏப்பிரல் முதலாம் திகதி மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்னர் இதுவரை 381 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என காசாவின் சிவில்பாதுகாப்பு படையின் பேச்சாளர் மஹ்மூட் பசால் தெரிவித்தார்.

இதில் மருத்துவமனையின் வேறு சில பகுதிகளிற்குள் புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் அல்லது உடல்பாகங்கள் அதிகளவிற்கு ஆழமாக புதைக்கப்படவில்லை என  அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்தனர்.

ஏனையவர்கள் இஸ்ரேலின் டாங்கிகளால் நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேலிய படையினர் உருவாக்கியுள்ள மணல்மேடுகளிற்குள் புதையுண்டு கிடக்கும் உடல்களை மீட்பதற்கு முயல்கின்றோம் என அல்சிபா மருத்துவமனையின் மருத்துவர் அஹமட் அலைவா சிஎன்என்னிற்கு தெரிவித்தார்.

சில உடல்கள் அழுக்குகள் அல்லது பிளாஸ்டிக் தகரங்களி;ற்கு கீழே காணப்படுகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் சமூக ஊடக செய்தியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளை ஒருபோதும் இராணுவமயப்படுத்தகூடாது என அவர் வீடியோ செய்தியில் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்களும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐநா அலுவலகமும் இந்த வாரம் அல்ஸிபா மருத்துவமனையை சென்றடைந்ததாக ஐநாவின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

மனிதாபிமான பணியாளர்கள் அங்கு செல்வதற்கு இஸ்ரேல் தொடர்ச்சியாக அனுமதி மறுத்துவந்துள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

ஸிபா மருத்துவமனை முற்றுமுழுதாக ஒரு மயானமாக மாறிவிட்டது பல பகுதிகளில் இன்னமும் உடல்கள் காணப்படுகின்றன என ஓசிஎச்ஏயின் மனிதாபிமான விவகாரங்களிற்கான சிரேஸ்ட அதிகாரி ஜொனாதன் விட்டல்டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு முகவர் அமைப்புடன் இணைந்து அல்ஸிபாவில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உட்கட்டமைப்பிற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக  சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படையி;னர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 500 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் 200 பேர் அழிக்கப்பட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகள் குறித்து புலனாய்வு அமைப்புகளிடமிருந்து துல்லியமான தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன அவர்கள் ஸிபா மருத்துவமனை பயங்கரவாதிகளின் தலைமையகமாகவும் கட்டுப்பாட்டு நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டது என புலனாய்வு தகவல்கள் கிடைத்தன எனவும் இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது பெருமளவு ஆயுதங்களை புலனாய்வு தகவல்களை கைப்பற்றினோம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய மோதல்களில் ஈடுபட்டோம் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளிற்கு பாதிப்பு ஏற்படாதவகையில் போரிட்டோம் எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் பாலஸ்தீனியர்கள்

தகர்க்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து சேதமடைந்த பாரிய கொங்கிரீட்கள் வெளித்தெரிவதை காண்பிக்கும் வீடியோக்களை சிஎன்என் பார்வையிட்டுள்ளது.

வெள்ளை தலைக்கவசம் அணிந்த ஐநாவின் பணியாளர்கள் இடிபாடுகளின் மேல் காணப்படுகின்றனர் -பல உள்ளுர் பணியாளர்கள் சவல்களை பயன்படுத்திஉடல்களை தோண்டி வெளியே எடுக்கின்றனர்.

ஏனையவர்கள் வெள்ளைதுணிகளால் போர்த்தப்பட்ட உடல்களை மிகவும் அவதானமாக கொண்டு செல்கின்றனர்.

தலைக்கு மேலே இஸ்ரேலிய விமானங்களின் சத்தம் கேட்பதையும் சோர்வடைந்த நிலையில் காணப்படும் பாலஸ்தீனியர் சிறுவர்கள் அவற்றை அவதானித்தபடி காணப்படுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

காணாமல்போனவர்களின் உடல்களை தேடுவதற்காக காசா மக்கள் மருத்துவமனை பகுதியில் குழுமியுள்ளனர்.

மனித புதைகுழிகளில் காணப்பட்டவர்களில் தனது தந்தையும் ஒருவர் என கசான் ரியாத் குனைத்தா தெரிவித்தார்.

அவர் ஒரு அப்பாவி பொதுமகன் என அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்தார். என்ன சொல்ல முடியும் அவர்கள் அவரை வீட்டிலிருந்து கொண்டு சென்று கொலை செய்தார்கள் என அவர் குறிப்பிட்டார்

இதனை சிஎன்எனால் உறுதிப்படுத்த முடியவில்லை.

மருத்துவமனைக்கு அருகிலிருந்த தங்கள் உறவினர்களின் வீடுகளிற்குள் நுழைந்த  இஸ்ரேலிய படையினர் அவர்களை தெற்கு நோக்கி தப்பியோடுமாறு உத்தரவிட்டனர் என  குறிப்பிட்ட கசான் ரியாத் குனைத்தா எனது தந்தை மருத்துவமனையின் சத்திரகிசிச்சை பிரிவிற்கு அருகில் காணப்பட்டார் திங்கட்கிழமை அவரது உடலை அங்கேயே கண்டுபிடித்தோம் எனவும் குறிப்பிட்டார்.

நாங்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அவரை காணவில்லை தொலைத்துவிட்டோம் பின்னர் திங்கட்கிழமை அவரது உடலையே கண்டுபிடிக்கமுடிந்தது இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து விலகி ஒரு வாரத்தின் பின்னர் அவரது உடலை கண்டுபிடித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் காணப்பட்ட நுஹா ஸ்வைலெம் என்ற பெண்மணி இஸ்ரேலிய படையினரால் தேடுதலின் போதுகைதுசெய்யப்பட்ட தனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்தோ அல்லது  எனது கணவருக்கு என்ன நடந்தது என்பது குறித்தோ எங்களிற்கு தெரியாது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா அல்லது புதைக்கப்பட்டுவிட்டனரா என்பது தெரியாது எங்கள் குழந்தைகள் எங்கே எனது கணவர் எங்கே என தெரிவியுங்கள் என அவர் மன்றாடினார்.

எங்கள் உறவுகளிற்கு கௌரவமான இறுதிமரியாதையை செலுத்தவிரும்புகின்றோம் என அல்ஷிபா மருத்துவமனையில் காணப்பட்ட பாலஸ்தீனியர்கள் சிஎன்என்னிற்கு தெரிவித்தனர்.

அவர்கள் கௌரவம் அற்ற விதத்தில் உயிரிழக்க நேர்ந்தது குறித்து அவர்கள்  கவலை வெளியிட்டனர். 

அல்ஷிபா மருத்துவமனையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட அடையாளம் காணப்படாத உடல்களிற்கு கௌரவமான இறுதிமரியாதை வழங்குவதாக காசாவின் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நாங்கள் அந்த உடல்களை மீட்டு கௌரவமான இறுதிமரியாதையை வழங்கவிரும்புகின்றோம் என அல்ஸிபாவின் மருத்துவர் அலைவா தெரிவித்தார்.

தங்கள் நேசத்திற்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை உறவுகள் அறியவிரும்புகின்றனர் அவர்கள் கைதுசெய்யப்பட்டார்களா அல்லது காணாமல்போனார்களா என அறியவிரும்புகின்றனர்  என அவர் தெரிவித்தார்.

ஏன் அவர்களை கைதுசெய்தார்கள் அவர்கள் என்ன குற்றமிழைத்தார்கள் நாங்கள் பாலஸ்தீனியர்கள் என்பதே ஒரேயொரு குற்றம் என பாலஸ்தீனியர் தாய் ஸ்வைலெம் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்