Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரம் -  அமெரிக்க பல்கலைகழங்களில் ஏற்பட்டுள்ள நிலை

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரம் -  அமெரிக்க பல்கலைகழங்களில் ஏற்பட்டுள்ள நிலை

25 சித்திரை 2024 வியாழன் 15:22 | பார்வைகள் : 2817


அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீனத்துக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அதாவது  பல்வேறு அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகிறது.

நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைகழத்தில் தொடங்கிய போராட்டம் பல்வேறு நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது.

இந்நிலையில் கொலம்பியா பல்கலைகழத்தில் மாணவர்களின் கூடாரங்களை கலைத்த பொலிசார் சிலரை கைது செய்தனர்.

இதுகுறித்து பேசிய அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் மைக் ஜான்சன், போராட்டத்தை நிறுத்துங்கள், முடியவில்லை என்றால் பல்கலைகழக தலைவர் ராஜினாமா செய்ய வேண்டுமென தெரிவித்தார்.

இதற்கிடையே மாணவர்களின் போராட்டங்களை கலைக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர், பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுவதாக மாணவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் களமிறங்கியுள்ளனர்.

இதனால் பெரும்பாலான பல்கலைகழங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்