Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் குழந்தைகளுக்கு அதிகரிக்கும் மூளைக்காய்ச்சல் அவதானம். மருத்துவப் பேராசிரியர் Robert Cohen.

பிரான்சில்  குழந்தைகளுக்கு அதிகரிக்கும் மூளைக்காய்ச்சல் அவதானம். மருத்துவப் பேராசிரியர் Robert Cohen.

27 சித்திரை 2024 சனி 06:20 | பார்வைகள் : 1191


முன்னர் இல்லாத அளவுக்கு குழந்தைகள் மத்தியில் மூளைக்காய்ச்சல் நோய் பிரான்சில்  அதிகரித்து வருவதாக l'Hôpital de Créteil மருத்துவமனையின் குழந்தை தொற்று நோய் நிபுணரும், தேசிய தொழில்முறை குழந்தை மருத்துவ கவுன்சிலின் தலைவருமான  பேராசிரியர் Robert Cohen தெரிவித்துள்ளார்.

COVID-19 பாதிப்புக்கு பின்னரான காலப்பகுதியில் மூளைக்காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் மத்தியில் மேலும் அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து 570 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மூளைக்காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசியை 2025 ஆம் ஆண்டுக்கு முன் குழந்தைகளுக்கு வழங்குவதை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற்படும் போது பெரியவர்களை விட மிகப் பெரும் பாதிப்பையும் ஆபத்துகளையும் அது விளைவிக்கும் எனவும் மருத்துவ பேராசிரியர் Robert Cohen தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்