Paristamil Navigation Paristamil advert login

கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்..?

கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்..?

2 சித்திரை 2024 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 766


கோடை காலம் வந்துவிட்டது. இப்போது நாம் அனைவரும் நமது சரும பராமரிப்பில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் என எந்த சருமம் இருந்தாலும் கோடை காலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இந்த கோடையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த எளிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.,

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முதலில் க்ளென்சிங், டோனிங், மாய்சரைசிங் என்ற முறையை பின்பற்றவும். அதாவது உங்கள் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சர் கொண்டு உங்கள் சருமத்தை முதலில் சுத்தப்படுத்தி கொள்ளவும். பின்னர் டோனர் கொண்டு ஈரப்பதம் செய்துவிட்டு இறுதியாக மாய்சரைஸர் பயன்படுத்தவும்.

 கற்றாழை ஜெல் : பொதுவாக கற்றாழை ஜெல்லை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது நல்லது. பச்சை கற்றாழை ஜெல்லை எடுத்து அதனை சுத்தம் செய்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யுங்கள். இது சூரிய ஒளியால் சருமத்தில் உண்டாகும் கருமையை நீக்க உதவும். மேலும் உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்கும்.

 வைட்டமின் நிறைந்த உணவு : தர்பூசணிகள், வெள்ளரிக்காய், கேரட் போன்ற வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்கவும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சரிசெய்யவும், தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

நீரேற்றமாக இருங்கள் : கோடை காலத்தில் நீரேற்றமாக இருப்பது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும். அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

கிளிசரின்: தினமும் கிளிசரின் கொண்டு சருமத்தை சுத்தப்படுத்துங்கள். கிளிசரின் சேதமடைந்த சரும செல்களை சரிசெய்து, நாள் முழுவதும் உங்கள் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

உதடுகளைப் பாதுகாக்கவும் : கோடை புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இது உதடு திசுக்களை சேதப்படுத்துகிறது. உங்கள் உதடுகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, SPF 15 அல்லது அதற்கும் அதிகமான லேபிளிடப்பட்ட லிப் பாமை தடவுவது நல்லது.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. குளிப்பதற்கு முன்னர் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மெல்லிய துண்டை பயன்படுத்தவும் : நாம் தினமும் பயன்படுத்தும் துண்டு மென்மையாக , சுத்தமான காட்டனாக இருக்க வேண்டும். கனமான துண்டு பயன்படுத்தி சருமத்தை துடைத்தால் கடினமாக மாறி விடும். எனவே லேசான துண்டு ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும்.

இயற்கை சோப்பு பயன்படுத்துங்கள் : வாசனை திரவிய சோப்புகள் உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து வறட்சியை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, இயற்கை சோப்புகள் அல்லது குளியல் ஜெல்களை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.

விளம்பரம் நீராவி பிடிக்கவும் : வாரத்திற்கு ஒரு முறை நீராவி பிடிக்கவும், கோடையில் உங்கள் சருமத்தில் அதிக அழுக்கு மற்றும் எண்ணெய் படிந்திருக்கும், இதனால் சரும துளைகள் மூடி சரும பிரச்சனைகள் உண்டாகும். இதனை தவிர்க்க ஆவி பிடிப்பது நல்லது. குளிக்கும் போது குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும் : உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் தவறாமல் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள், ஏனெனில் இது உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமம் வறண்டு போவதையும் தடுக்கிறது. உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப சன்ஸ்கிரீனை வாங்குவது நல்லது.

ஃபேஸ் பேக் பயன்படுத்தவும் : ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் சருமம் பொலிவாகும். இதற்கு உங்களுக்கு விருப்பமான பழங்கள், பயத்த மாவு, நலங்கு மாவு, தயிர், மஞ்சள் தூள், தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

எஸ்போலியேஷன் : நமது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் ஒன்றாகி வறண்ட சருமத்தை உண்டாக்குகிறது. இதனை எஸ்போலியேஷன் செய்வதால் நீக்க வேண்டும். இதற்கு ஸ்க்ரப்களும் உள்ளன. இரசாயன ஸ்க்ரப்கள் எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்.

ஷேவிங் : உங்கள் சருமத்தை ஷேவிங் செய்யாமல் இருப்பது மிகவும் வறண்ட சருமம், வெடிப்புகள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எப்பொழுதும் ஷேவிங் ஜெல் அல்லது க்ரீமைப் பயன்படுத்துங்கள். நீங்கள் ஷேவ் செய்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க, சருமத்தை ஈரப்பதமாக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்