Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் தென்படும் சூரிய கிரகணம்....

ரொறன்ரோவில் தென்படும் சூரிய கிரகணம்....

8 சித்திரை 2024 திங்கள் 07:51 | பார்வைகள் : 408


கனடாவின் ரொறன்ரோவில் தென்படும் சூரிய கிரகணம் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பார்க்கக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவிதமான சூரிய கிரகணம் எதிர்வரும் 2144ம் ஆண்டில் மீண்டும் ரொறன்ரோவில் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மெக்மெஸ்டர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானவியல் பேராசிரியர் ரொபர்ட் கொக்பொர்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 1925ம் ஆண்டில் இவ்வாறான பூரண சூரிய கிரகணம் ஒன்று ரொறன்ரோவில் தென்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பூரண சூரிய கிரகணம் ஒவ்வொரு பதினெட்டு மாதங்களுக்கு ஒரு தடவையும் நிகழும் என்ற போதிலும் ரொறன்ரோவில் மீண்டும் பூரண சூரிய கிரகணத்தை பார்வையிட 2144ம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணி முதல் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் எனவும், பிற்பகல் 3.18 மணிக்கு பூரண சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கு பல்வேறு இடங்களிலிருந்தும் கனடாவிற்கு மக்கள் குழுமியுள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்