Paristamil Navigation Paristamil advert login

தக் லைஃப் படத்தில் இணைந்த இரு பாலிவுட் பிரபலங்கள்!

 தக் லைஃப் படத்தில் இணைந்த இரு பாலிவுட் பிரபலங்கள்!

1 வைகாசி 2024 புதன் 04:21 | பார்வைகள் : 270


நாயகன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் இணைந்துள்ள இரண்டு பாலிவுட் நட்சத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே... கமல்ஹாசனின் கதாபாத்திரம் குறித்து தெரிவிக்கும் விதத்தில் படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

மேலும் கமல்ஹாசன் தன்னுடைய மற்ற படங்களிலும், அரசியல் பணியிலும் ஈடுபட்டு வந்ததால்... படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்ட நாளில் துவங்காமல் தாமதமாகவே துவங்கியுள்ளது. இதன் காரணமாக இப்படத்தில் கமிட் ஆன, துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள் இப்படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.

எனவே இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் புதிதாக கமிட் ஆகி உள்ளதாக கூறப்பட்டது. இவர்களை தவிர திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

பல பிரபலங்கள் நடித்து வரும் இந்த படத்தில்,  தற்போது இரண்டு பாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி மற்றும் பாலிவுட் நடிகர் அலிபாசல் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்