Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

கனடாவில் மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

5 வைகாசி 2024 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 587


கனடாவில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு 16700 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த இருவருக்கும் டெக்ஸாஸைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த மூவரும் மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமேற்கு ஒன்றாரியோவின் கிரால்டான் பகுதியில் இந்த மூவரும் சட்டவிரோதமாக மீன்பிடித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடிப்பது தொடர்பிலான வரையறைகளை மீறி மூன்று பேரும் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மூவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்