Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

இஸ்ரேல் உடனான பேச்சுவார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு

7 வைகாசி 2024 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 761


ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது.சுமார் ஏழு மாதங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஃபா நகரைத் தவிர்த்து ஏறக்குறைய முக்கியமான நகரங்களில் இஸ்ரேல் தடைவழி தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

மேலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த உள்ளோம். இதனால் பொதுமக்கள் ரஃபாவை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ரஃபா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையை நிறுத்த ஹமாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனிதாபிமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அல் மவாசி மற்றும் கான் யூனிஸ் பகுதிகளுக்கு செல்லுமாறு ரஃபாவில் வசிக்கும் மக்களை இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒருமுறை இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஹமாஸ் 100 பணயக்கைதிகளை விடுவித்தது. பிணைக் கைதிகளாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.

ஏழு நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி, இஸ்ரேல் மீண்டும் போரைத் தொடங்கியது. காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் வாழ்ந்தனர், மேலும் 33,000 க்கும் மேற்பட்ட மக்கள் மோதலில் இறந்தனர்.


ரஃபா நகரில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்