Paristamil Navigation Paristamil advert login

PSGயின் UEFA சாபம் -  அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்வி

PSGயின் UEFA சாபம் -  அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்வி

8 வைகாசி 2024 புதன் 08:37 | பார்வைகள் : 298


UEFA அரையிறுதிப் போட்டியில் போருஷ்யா டார்ட்மண்ட் அணி 1-0 என்ற கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைனை வீழ்த்தியது. 

சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது லெக்கில் PSG மற்றும் Dortmund அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரு அணிகளும் முதல் பாதியில் சமபலத்துடன் மோதின. இதனால் கோல் ஏதும் விழவில்லை. 

ஆனால், இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே மாட்ஸ் ஹம்மெல்ஸ் PSG அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆட்டத்தின் 50வது நிமிடத்தில், கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை ஹம்மெல்ஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதுவே டார்ட்மண்ட் அணியின் வெற்றி கோலாகவும் மாறியது. 

இறுதிவரை போராடிய PSG அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் அந்த அணியின் UEFA கிண்ணக் கனவு தகர்ந்தது.

மேலும், இதுவே நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே PSG அணிக்காக பங்கேற்ற கடைசி UEFA தொடராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


அதே சமயம் 11 ஆண்டுகளுக்கு பின்னர் டார்ட்மண்ட் அணி UEFA இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்