Paristamil Navigation Paristamil advert login

சினிமா குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு…. - கேப்ரியல் அத்தால்..!

சினிமா குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு…. - கேப்ரியல் அத்தால்..!

15 மார்கழி 2021 புதன் 12:30 | பார்வைகள் : 53612


இன்றைய பிரெஞ்சு புதினத்தில் ‘சினிமா குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு நுழைந்த’ அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் குறித்து சில தகவல்களை பார்க்கலாம்…

மார்ச் 16, 1989 ஆம் ஆண்டு பிறந்த கேப்ரியல் அத்தாலுக்கு இப்போது வயது 32. Clamart நகரில் பிறந்த அவர், படித்தது வளர்ந்தது எல்லாமே பரிசில் தான். 13 ஆம் மற்றும் 14 ஆம் வட்டாரம் மிக நெருக்கமான பகுதி அவருக்கு. மூன்று சகோதரிகளுடன் ஒற்றை ஆண் பிள்ளையாக வளர்ந்த கேப்ரியல் அத்தால், 2006 ஆம் ஆண்டு 17 வயதில் அரசியக்கு வந்துவிட்டார்.

அவர் அரசியலுக்கு வந்தது ஒரு பக்கம் இருக்க, அவரது குடும்பத்தில் எவருக்கும் அரசியல் குறித்த எந்த சிந்தனையும், செயலும் இல்லை.

அவரது அப்பா ஒரு வழக்கறிஞர். ஆனால் அவர் அது மட்டுமில்லை. ஒரு சினிமா தயாரிப்பாளர். பல பிரெஞ்சு திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவரது அம்மாவும் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இயக்கி வருகின்றார்.

அவரது சகோதரிகளும் பின்நாட்களில் சினிமா துறைக்குள் நுழைந்தபோதும்…. ‘சினிமாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அரசியலுக்குள் நுழைந்தார் கேப்ரியல் அத்தால்.

***

முதன்முறையாக 2014 ஆம் ஆண்டு Vanves நகரில் ‘நகரசபைத் தேர்தலுக்காக’ சோசலிச கட்சி சார்பாக போட்டியிட்டார்.

பின்னர் 2017 ஆம் ஆண்டு Hauts-de-Seine மாவட்டத்தில் 10 ஆவது தொகுதியில் வெற்றி பெற்று பாராமன்றத்துக்குள் நுழைந்தார். மிக விரைவாகவே அவர் ‘இளம் திறமையாளராக’ அடையாளம் காணப்பட்டார்.

கல்வி கலாச்சார குழுவில் அவர் பாராளுமன்றத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் போது, இம்மானுவல் மக்ரோனின் La République En Marche! கட்சியில் இணைந்தார்.

முதலில் அக்கட்சியின் ஊடக பேச்சாளராக இருந்தார். அப்போது மக்ரோனுடன் மிக நெருக்கம் ஏற்பட்டது.

பின்னர், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி, கேப்ரியல் அத்தால் அரச ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டார்.

ஐந்தாம் குடியரசின் மிக இளவயது அரச ஊடக பேச்சாளர் இவராவார்.

*****

இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிக வெளிப்படையாகவே உள்ளார். இவர் ஓரினச்சேர்க்கை உறவுமுறையில் உள்ளார். இவரது காதலன் பெயர் Stéphane Séjourné. இவர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராவர்.

****

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து அரசியக்கு நுழைந்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளமை கேப்ரியல் அத்தால் கொண்டுள்ள திறமைக்கு சான்று.

சுபம்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்