Paristamil Navigation Paristamil advert login

மேகதாது அணை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பு

மேகதாது அணை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல்வர் பட்ஜெட்டில் அறிவிப்பு

16 மாசி 2024 வெள்ளி 13:31 | பார்வைகள் : 1007


மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறையினரின்  அனுமதி பெற்று  அணை கட்டப்படும் எனவும் கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 

இன்றைய பட்ஜெட்டில் ஏதும் இல்லை என பா.ஜ., எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். சிதாராமையா ,பொய்ராமையா , ஒன்றுமில்லை ஒன்றுமில்லை பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்றும் பாடினர். 

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், இம்மாதம் 12ம் தேதி துவங்கியது. நிதித்துறையை நிர்வகிக்கும் முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை இன்று (பிப்.,16) தாக்கல் செய்தார். அப்போது மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிவிப்பையும் சித்தராமையா வெளியிட்டார்.

அவர் கூறுகையில், ''மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.  அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும். பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம்.  மேகதாது பகுதியில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மற்ற பகுதிகளில் நிலங்கள் ஒதுக்கப்படும்'' மரங்கள் வெட்டுவதற்கான சர்வே பணிகள் நடக்கிறது.  என்றார்.

பீர் விலைக்கு வரி உயர்த்தப்படுவதாகவும், சேட்டிலைட் நகரம் அமைக்கப்படும் , புதிய மின்சார, டீசல் பஸ்கள் வாங்கப்படும் என்றும்  அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்
 

வர்த்தக‌ விளம்பரங்கள்