Paristamil Navigation Paristamil advert login

யாழ் - கொழும்பு ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!

யாழ் - கொழும்பு ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்!

15 ஆடி 2023 சனி 13:13 | பார்வைகள் : 4041


ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகளால் சுமார் 06 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில்வேயில் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் பாதையை நவீனமயப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், அதன்படி இந்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முதல் அந்த ரயில் பாதையில் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கு மாத்திரம் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

மஹவ முதல் ஓமந்தை வரையிலும் அனுராதபுரத்திலிருந்து மஹவ வரையிலும் தனித்தனியாக 2 கட்டங்களாக வீதியின் நவீனமயமாக்கல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ், இந்திய IRCON நிறுவனம் மேற்கொண்ட நவீனமயமாக்கல் பணிகளுக்காக செய்யப்பட்ட முதலீட்டின் மதிப்பு 91.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

இதன்படி, இத்திட்டத்தின் முதற்கட்டமாக அனுராதபுரத்திலிருந்து ஓமநதை வரையிலான ரயில் பாதை முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கலின் பின்னர், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ரயில் பாதையில் சோதனை ஓட்டம் அண்மையில் இடம்பெற்றதுடன், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் அதில் கலந்துகொண்டார்.

அதன்படி, நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவை இன்று (15) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

ரயிலில் யாழ்ப்பாணம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அதன்படி இன்று காலை 5.45 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி ரயில் பயணிக்க ஆரம்பித்தது.

இந்த ரயிலானது தமது அன்றாட நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள உதவுவதாக குறித்த ரயிலில் பயணித்த பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்