Paristamil Navigation Paristamil advert login

தொடரும் போர் - பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டவட்டம்

தொடரும் போர் - பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டவட்டம்

22 பங்குனி 2024 வெள்ளி 02:22 | பார்வைகள் : 1724


காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாத அமைப்பை முற்றாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது.

காசாவில் ஹமாஸை தோற்கடிப்பதற்கான தனது முயற்சிகளை இஸ்ரேல் அரசு தொடரும் என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களிடம் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) காணொலி காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது அவர், காசா பகுதியில் ஹமாஸை தோற்கடிப்பதற்கான தனது முயற்சிகளை தனது அரசாங்கம் தொடரும் என்று தெரிவித்தார். 

செனட்டின் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவரும், யூத அமெரிக்கருமான செனட்டர் Chuck Schumer, ''இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும் கொள்கைகள் காரணமாக நெதன்யாகு இஸ்ரேலை ஆளத் தகுதியற்றவர்'' என கடுமையாக சாடினார். 

மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் நீண்ட கால எதிர்காலம் குறித்து நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். 

நீங்கள் பிரச்னையை பக்க சார்பற்றதாக ஆக்கும்போது, இஸ்ரேலுக்கு உதவுவதற்கான காரணத்தை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள் என்று Schumer செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சி வட்டாரங்களில் நெதன்யாகு தனது ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்