Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

அமெரிக்காவில்  14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

26 பங்குனி 2024 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 1283


அமெரிக்காவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அது குறித்த சட்டத்தில் புளோரிடா மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை வைத்திருப்பதை சட்டம் தடை செய்கிறது.

தற்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக வலைத்தள கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்