Paristamil Navigation Paristamil advert login

சசிகலாவை திடீரென ரஜினி சந்திக்க காரணம் என்ன?

சசிகலாவை திடீரென  ரஜினி சந்திக்க காரணம் என்ன?

25 மாசி 2024 ஞாயிறு 11:11 | பார்வைகள் : 1014


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று திடீரென சசிகலாவை சந்தித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சமீபத்தில் போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த நிலையில் இந்த கிரகப்பிரவேசம் நிகழ்வில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதே போயஸ் கார்டனில் குடியிருக்கும் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக ’வேட்டையன்’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் சசிகலாவின் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டிற்கு சென்று அவரது புதிய வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வீடு கோயில் போல் இருப்பதாக சசிகலாவை பாராட்டிய அவர் சசிகலாவுக்கு சிறப்பு பரிசையும் கொடுத்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ’சசிகலாவின் கிரகப்பிரவேசத்திற்கு தன்னால் வர முடியாததால் தற்போது வந்து வாழ்த்து தெரிவித்தேன் என்று கூறினார். மேலும் ‘அரசியல் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ’அரசியல் எதுவும் பேசவில்லை’ என்று கூறினார்.

மேலும் இந்த வீடு சசிகலாவுக்கு பெயர், புகழ், சந்தோசம், நிம்மதி எல்லாம் கொடுக்க வேண்டும் என்று நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து ரசிகர் ரஜினிகாந்தை வாசல் வரை சசிகலா வந்து வழி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்