Paristamil Navigation Paristamil advert login

இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கைதிகளின் எண்ணிக்கை!

இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கைதிகளின் எண்ணிக்கை!

13 சித்திரை 2024 சனி 06:40 | பார்வைகள் : 1556


பிரெஞ்சு சிறைச்சாலைகளில் முன்னர் எப்போதும் இல்லாத அளவு கைதிகள் நிரம்பிவழிகின்றனர். ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் அதன் அளவை விட அதிகமாகவும், சில இடங்களில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவும் கைதிகள் சிறைவைக்கப்படுட்ள்ளனர்.

பரிசின் துணை முதல்வர்  Danielle Simonnet, ஏப்ரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை Nanterre  நகர சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன்போது கைதிகளின் சுகாதாரம் குறித்து ஆராய்ந்தார். குறித்த சிறைச்சாலையில் 592 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ள நிலையில், அங்கு 1,033 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்டார். கைதிகளுக்கு தேவையன மெத்தைகளை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அதேவேளை, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தமாக 76,766 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டை விட 4,415 கைதிகள் அதிகமாகும்.

அதேவேளை, பிரான்சில் 61,629 கைதிகளுக்கு போதுமான சிறைச்சாலைகளே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 



 

வர்த்தக‌ விளம்பரங்கள்