Paristamil Navigation Paristamil advert login

கட்டியணைத்தல், ஆரத்தழுவுதல், தொடுதல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

கட்டியணைத்தல், ஆரத்தழுவுதல், தொடுதல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

21 சித்திரை 2024 ஞாயிறு 07:20 | பார்வைகள் : 1561


பிரான்சில் வெளிவரும் மருத்துவ இதழான "Nature Human Behaviour" என்னும் இதழில் "கட்டியணைத்தல், ஆரத்தழுவுதல், தொடுதல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?" எனும் கேள்விக்கான விடையை நீண்டதொரு ஆய்வின் பின்னர் அதனை கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

சுமார் 130 ஆய்வுகளை குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை  10,000 மனிதர்களை கொண்டு மேற்கொள்ளப்பட சர்வதேச ஆய்வுகளின் முடிவே அந்தக் கட்டுரையாகும். இதில் இது கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கிறது, வலி, சோர்வு உணர்வைக் குறைக்கிறது அதேவேளை தூக்கத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் கார்டிசோல் அளவுகளை (மன அழுத்த ஹார்மோன்) குறைக்க உதவுகிறது என தெரியவந்துள்ளது.

மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில், இது எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது குழந்தைகளின் கல்லீரல் நொதிகள், வெப்பநிலை, சுவாசம் மற்றும் கார்டிசோல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்