Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் சிம்புவுடன் இணையும் திரிஷா?

மீண்டும் சிம்புவுடன் இணையும் திரிஷா?

21 சித்திரை 2024 ஞாயிறு 09:12 | பார்வைகள் : 565


மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்போது தேர்தல் களத்தில் கமல் பிஸியாக இருப்பதால் தக் லைப் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.

இந்த படத்தில் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், திரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் கமல் அல்லாத படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய் சல்பர் எனும் பகுதியில் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்கின்றனர் என ரசிகர்கள் உற்சாகமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்