Paristamil Navigation Paristamil advert login

இரண்டாம் உலகப்போரில் சிக்குண்ட பிரான்சின் பழமை வாய்ந்த வங்கி

இரண்டாம் உலகப்போரில் சிக்குண்ட பிரான்சின் பழமை வாய்ந்த வங்கி

13 சித்திரை 2016 புதன் 08:00 | பார்வைகள் : 19211


Société Générale வங்கியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இது ஐரோப்பாவிலேயே மிக பழமை வாய்ந்த வங்கியாகும். இந்த வங்கி 1864 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. Eugène Schneider தலைமையில் 1864ம் ஆண்டு பரிசில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி.., ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு வளர்ச்சிகளை கண்டு இன்று உலகம் முழுவது பரந்து 'கிளை' விட்டு நிற்கிறது.

 

வங்கி ஆரம்பித்து முதல் 30 வருடங்களுக்குள்ளேயே பரிசில் 15 கிளைகளும், பிரான்சில் மொத்தம் 32 கிளைகளும் கொண்டதாக வளர்ச்சி பெற்றது. 1895ம் வருடத்தில் மொத்தம் 14,000 பங்குதாரர்களையும்... அடுத்த 20 வருடங்களுக்குள் அது 122,000 ஆகவும் அதிகரித்து சாதனை படைத்தது.

 

ஆனால் அடுத்த சில வருடங்களிலேயே பல சிக்கல்களும் வந்து சேர்ந்தது இந்த வங்கிக்கு. 1930ம் வருடம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பல பங்குதாரர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டார்கள். வெளியில் கொடுக்கப்பட்டிருந்த பல மில்லியன் பணத்திற்கு முடிவு கிட்டாமல் போய்விட்டது. இது மட்டுமில்லாமல் வங்கிகளில் பணம் போட்டிருந்த மக்கள் தங்கள் பணங்களை மீள பெற்றுக்கொண்டு இடம்பெயர்ந்தார்கள்.

 

இப்படியான பல இன்னல்களை இந்த வங்கி சந்தித்து, சரிவின் விளிம்பிற்கே சென்றாலும் தனது சேவையை ஒருபோதும் நிறுத்திக்கொள்ளவில்லை. 1945 ஆம் ஆண்டு Société Générale வங்கி தேசியமயமாக்கப்பட்டு பிரான்ஸ் எல்லைகளை கடந்து அண்டை நாடுகளிலும் தங்கள் கிளைகளை பரப்பியது.

 

ஆனால் அப்போதுதான் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்திருந்ததால்.. Société Générale  வங்கிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 1959ஆம் ஆண்டிற்கு பிறகே பொருளாதாரம் சீரடைய தொடங்கியிருந்தது. அதன் பின்னர் முழுமூச்சாக தனது சேவையை உலகம் முழுவதற்கும் கொடுத்தது.

 

இன்று Société Générale  வங்கி ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கிகளில் 6 வது இடத்தையும், பிரான்சின் மிகப்பெரிய வங்கிகளில் 3ம் இடத்தையும் தக்கவைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வங்கிகளில் மொத்தம் இரண்டு லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மே மாதம் 4ம் திகதி Société Générale  வங்கி தனது 152வது வருட நிறைவை கொண்டாடுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்