மரண அறிவித்தல்
திருமதி சகாயராஜன் மல்லிகா
- மண்ணில்
18-11-1961 - விண்ணில்
22-12-2024
- பிறந்த இடம்
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் - இறந்த இடம்
பிரான்ஸ் பொண்டி
நர்ஷிகா, இனோத், பிரவீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவஞானம் (இலண்டன்) காலஞ்சென்ற விமலாதேவி, தெய்வேந்திரம் (கொழம்பு), சிவக்குமார் (ஜேர்மனி),யசோதா (கனாடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரூபிகா (இலண்டன்), இராசரத்தினம், றெஜீனா, வசந்தமாலா (ஜேர்மனி), அருளானந்தம் (கனடா) மற்றும் பாவனி, றொபேட், அல்பேட், பீற்றர் சுரேஷ், பெர்னாடெட் (தங்கச்சி), பெனடிட் (செல்வா - இந்தியா), மாசில்பா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் வித்துடல் Chambre Mortuaries Porte 14 - Hopital Henri Mondor 1 Rue Gustave Eiffel, 94000 Creteil என்ற முகவரியில் 26-12-2024 வியாழக்கிழமை 14.00 மணி முதல் 16.00 மணி வரையும் 28-12-2024 சனிக்கிழமை 14.00 மணி முதல் 16.00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,
30-12-2024 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை Chambre Mortuaries Porte 14 - Hopital Henri Mondor 1 Rue Gustave Eiffel, 94000 Creteil என்ற முகவரியில் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்று
12.30 மணி முதல் 14.00 மணி வரை Eglise Saint Louis de Bondy 13 Rue Etienne Dolet, 93140 Bondy என்ற முகவரியில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிராத்தனைகள் இடம்பெற்று,
14.30 மணிக்கு Cimetière Inercommunal de Bondy 76 Avenue Henri Varagnat, 93140 Bondy எனும் முகவரியில் அமைந்துள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
0033651565595 கணவன் - சோதி
0033650317022 மகள் - நர்ஷிகா
00447500833248 மைத்துனன்