’தளபதி 69’ தயாரிப்பாளர் பிரச்சனை முடிவுக்கு வருமா?
13 சித்திரை 2024 சனி 08:38 | பார்வைகள் : 1825
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 69’ திரைப்படத்தை ’பாகுபலி’ பட நிறுவனமான டிவிவி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. எனவே ’தளபதி 69’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ், லைக்கா, ஏஜிஎஸ் உள்பட சில நிறுவனங்கள் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், விஜய்யே கூட இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’தளபதி 69’ திரைப்படத்தை விஜய்யின் ’லியோ’ படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த தயாரிப்பில் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் இணைந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ’தளபதி 69’ படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டு, எச் வினோத்திடம் கால்ஷீட் வாங்கி இருந்ததாகவும், எச் வினோத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அட்வான்ஸ் கொடுத்து இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த அட்வான்ஸ் மற்றும் கால்ஷீட் தேதிகளை ’தளபதி 69’ படத்திற்காக மாற்றிக்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ’தளபதி 69’ தயாரிப்பாளர் குறித்த குழப்பமான தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு வழியாக இந்த பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.