இரவில் கண்டிப்பா ஏன் பல் துலக்க வேண்டும் தெரியுமா..?
3 சித்திரை 2024 புதன் 10:07 | பார்வைகள் : 1896
இரவு நேரத்தில் பற்களை துலக்காததால் ஏற்படக்கூடிய தாக்கம் : இனிப்புகளை சாப்பிடும் பொழுது நாம் பல் துலக்காமல் விட்டு விட்டால் அதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும். சர்க்கரை ஆனது வாயில் உள்ள பாக்டீரியாக்களுடன் தொடர்பு கொண்டு அமில சூழலை உருவாக்குகிறது. இந்த அமிலம் பற்சிற்பியை அரித்து அதனால் சொத்தை பல் உருவாகிறது. இது அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த சர்க்கரையானது சொத்தைப் பற்களோடு விடுவதில்லை. ஈறு தொடர்பான நோய்களையும் ஏற்படுத்துகிறது.
சர்க்கரையில் வளரக்கூடிய இந்த பாக்டீரியா ஈறுகளை சேதப்படுத்தி, வீக்கம் மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. வாய் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடிய நபர்கள் குறிப்பாக இரவு நேரத்தில் பல் துலக்காத 85 முதல் 90 சதவீத இந்தியர்கள் ஏதோ ஒரு வகையிலான பல் தொடர்பான சிக்கல்களை அனுபவிப்பதாக தெரிகிறது.
இரவு நேரத்தில் பல் துலக்கும் பொழுது சொத்தைப்பல் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது. படுப்பதற்கு முன்பு நாம் பல்துலக்கி விடுவதால் வாயில் இருக்கக்கூடிய கிருமிகள், உணவு துகள்கள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டு பற்கள் சேதம் அடைவது தவிர்க்கப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் பல் துலக்குவதை ஒரு சாய்ஸாக எடுக்காமல் அதனை கட்டாயமாக பின்பற்றுவதை செய்யுங்கள்.
இனிப்புகளுக்கு பதிலாக டார்க் சாக்லேட்டுகளை தேர்வு செய்யுங்கள். இனிப்பு சாப்பிடுவதை பகல் நேரத்தோடு கட்டுப்படுத்தவும். இரவு நேரத்தில் இனிப்பு சாப்பிடுவதை முடிந்த வரை தவிர்க்கவும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகவும். வழக்கமான முறையில் டென்டல் செக்கப் செய்து கொள்வது உதவும். இது போன்ற எளிமையான விஷயங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் வாயின் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாக்கலாம்.