கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு..

16 ஆடி 2024 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 1562
உலகநாயகன் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தை தயாரித்து வரும் நிலையில் அந்த படத்தின் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதால் இந்த படம் குறித்த ஏதாவது ஒரு அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலர் ’எஸ்டிஆர் 48 ’படத்தின் அறிவிப்பு வரலாம் என்றும் அல்லது சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தின் அறிவிப்பும் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் நாளை மறுநாள் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
