Paristamil Navigation Paristamil advert login

 மூன்றாம் உலகப் போர் - பிரபல இந்திய ஜோதிடரின் கணிப்பு

 மூன்றாம் உலகப் போர் - பிரபல இந்திய ஜோதிடரின் கணிப்பு

5 ஆவணி 2024 திங்கள் 07:54 | பார்வைகள் : 303


"இந்திய நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படும் இந்திய ஜோதிடர் குஷால் குமார், ஒகஸ்ட் 4 அல்லது ஆகஸ்ட் 5 ஆம் திகதிகளில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என கூறியுள்ளார்.

குஷால் குமார் ஹரியானாவின் பஞ்சகுலாவைச் சேர்ந்த வேத ஜோதிட எழுத்தாளர் ஆவார்.  

வேத ஜோதிடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பொருளாதாரம், வானிலை, வணிகம், உத்திகள், மோதல்கள் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

தனிநபர்களின் பிறந்த நேர விவரங்களின் அடிப்படையில் தனிப்பட்ட ஜோதிட வழிகாட்டுதலையும் அவர் வழங்குவார்.


மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரை முன்னரே கணித்த இந்திய ஜோதிடர் குஷால் குமார், புவிசார் அரசியல் நிகழ்வுகளின் கலவையானது பேரழிவு மோதலை தூண்டும் எனவும் கூறியிருந்தார்.

மூன்றாம் உலகப் போரின் தொடக்கத் திகதி குறித்து ஜோதிடர் குமார் பல கணிப்புகளைச் செய்துள்ளார். ஆனால் இதுவரை அவை எதுவும் நிறைவேறவில்லை.

முன்னதாக ஜூன் 18 ஆம் திகதி மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அந்த திகதியில் எந்தவொரு போரும் ஆரம்பமாகவில்லை.


பின்னர் அவர் ஒரு புதிய திகதியை அறிவித்தார். அதாவது மூன்றாம் உலகப் போர் ஜூலை 26 அல்லது ஜூலை 28 இல் தொடங்கும் என்று கூறினார். ஆனால் மீண்டும், அவரது கணிப்பு தவறானது.

இப்போது, ​​​​இறுதியாக அவர் கூறியுள்ள திகதியான இன்று, போர் தொங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்