Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்ச்சி.. மில்லியன் கணக்கானோர் தொலைக்காட்சி வழியாக பார்வையிட்டனர்!

ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்ச்சி.. மில்லியன் கணக்கானோர் தொலைக்காட்சி வழியாக பார்வையிட்டனர்!

12 ஆவணி 2024 திங்கள் 08:09 | பார்வைகள் : 3070


நேற்று ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வழியாக அண்ணளவாக 17.1 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சிகள் நேற்று மாலை முதல் France 2 தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அமெரிக்க திரைப்பட நடிகர் Tom Cruse உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை 17.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டதாக Médiamétrie எனும் நிறுவனம் அறிவித்துள்ளது.

முந்ன்னதாக, ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வினை தொலைக்காட்சி வழியாக 23.2 மில்லியன் பேரும் அதன் மறு ஒளிபரப்பினை 1.2 மில்லியன் பேரும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்