விலங்குகளிடையே தீவிரமாக பரவும் சார்ஸ் கோவ்-2 வைரஸ்
12 ஆவணி 2024 திங்கள் 09:02 | பார்வைகள் : 1118
அமெரிக்காவில் விலங்குகளிடையே புதிய ஆய்வு நடத்தப்பட்ட து.
அந்த ஆய்வில், கொரோனாவுக்கு காரணமான சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ், இப்போது வனவிலங்குகளிடையே பரவலாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புனர்வாழ்வு மையங்களில் உள்ள விலங்குகள் அல்லது காட்டில் வழிதவறி சிக்கி மீண்டும் காட்டுக்குள் விடப்பட்ட கிட்டத்தட்ட 800 விலங்குகளில் நாசி மற்றும் வாய்வழி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இது தெரிய வந்துள்ளது.
வர்ஜீனியா டெக் பாதுகாப்பு உயிரியலாளர் அமண்டா கோல்ட்பர்க் கூறுகையில், "வைரஸ் எங்கும் பரவியுள்ளது என்பதே பெரிய டேக்-ஹோம் செய்தி என்று நான் நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
சில உயிரினங்களில் 60% வரை அதிக வெளிப்பாடு விகிதங்களை ஆய்வு கண்டறிந்துள்ளது.
முந்தைய கொரோனா நோய்த்தொற்றைக் குறிக்கும் ஆன்டிபாடிகளுடன் ஆறு வெவ்வேறு வகைகள் இதில் கண்டறியப்பட்டன.