Paristamil Navigation Paristamil advert login

திருப்பதி லட்டு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த நடிகை ரோஜா வலியுறுத்தல்

திருப்பதி லட்டு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த நடிகை ரோஜா வலியுறுத்தல்

1 ஐப்பசி 2024 செவ்வாய் 03:32 | பார்வைகள் : 744


திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துக்களை ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவை கூட உபயோகித்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும். இந்த விவகாரத்தை விசாரிக்க சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. 

சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதன்மூலம் உண்மை வெளிவர வேண்டும்.புனிதத்தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் பக்தி பூர்வமான உணர்ச்சிகளோடு விளையாடியவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்