ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி..
1 ஐப்பசி 2024 செவ்வாய் 10:29 | பார்வைகள் : 811
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் இது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இன்று காலை ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா என்பது குறித்த பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இருதய நோய்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வைப்பதாகவும் இசிஜி, எக்கோ மற்றும் தேவைப்பட்டால் ஆஞ்சியோ பரிசோதனை செய்யவும் மருத்துவ குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் செய்யப்படுவதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைந்து உடல்நலம் பெற வாழ்த்துகிறேன் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.