தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!
1 ஐப்பசி 2024 செவ்வாய் 13:27 | பார்வைகள் : 724
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 69’ திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இன்று முதல் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தது.
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நட்சத்திரங்களின் அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்றைய முதல் நாள் அறிவிப்பில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரம் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இணைந்த முதல் நபராக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ள நிலையில் ’தளபதி 69’ படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது இந்த படம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நான்கு நட்சத்திரங்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கேவிஎன் புரடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள ’தளபதி 69’ திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.