Paristamil Navigation Paristamil advert login

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ...

செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால்  கிடைக்கும் நன்மைகள் ...

1 ஐப்பசி 2024 செவ்வாய் 13:29 | பார்வைகள் : 1417


செவ்வாழைப் பழத்தை பலரும் விரும்பி சாப்பிடக் காரணம் அதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் : பொதுவாக வாழைப்பழம் என்றாலே மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். அதைதான் பெரும்பாலானோர் சாப்பிடவும் செய்கிறார்கள். ஆனால் செவ்வாழைப் பழத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக இருக்கிறது. தினசரி செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள்: எப்போதும் செவ்வாழைப் பழத்தை நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுங்கள். இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.

உடல் எடையை குறைக்கும்: மற்ற பழங்களை விட செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகளே உள்ளன. இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் சாப்பிட்டதும் உடனே வயிறு நிரம்பிவிடுகிறது.

சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது: செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. அடிக்கடி செவ்வாழை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம். இதிலுள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்துகிறது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட உதவுகிறது: சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள், செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நிகோடின் உட்கொள்வதை குறைக்க முடியும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை குறைக்க இந்தப் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உதவுகிறது

சருமத்தை பாதுகாக்கிறது: அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால் நமது சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது: செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் அவர்களின் சிவப்பு ரத்த அனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தலைமுடிக்கு நல்லது: செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் தலைமுடியில் உள்ள பொடுகு குறைகிறது. குளிர்காலத்தில் தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெயோடு கலந்து செவ்வாழைப் பழத்தை தலையில் தேய்த்தால் தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.

மூலத்தை குணப்படுத்தும்: மலச்சிக்கலை போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கிறது செவ்வாழைப் பழம். மேலும் நாள்பட்ட மலச்சிக்கல், மூலம் ஆகியவற்றை குணப்படுத்தவும் செவ்வாழைப் பழம் உதவுகிறது. தினமும் மதிய வேளையில் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படுகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும்: செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது உங்களின் இதயத்துடிப்பை லேசாக்கி உடலில் உள்ள நீர்த்தன்மையை நிலைப்படுத்துகிறது. தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்