Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் அதிகமாக சம்பாதித்தால் திருமண முடிவு.. - ஆய்வு ஒன்றி தெரியவந்த அதிர்ச்சி முடிவு!

பெண்கள் அதிகமாக சம்பாதித்தால் திருமண முடிவு.. - ஆய்வு ஒன்றி தெரியவந்த அதிர்ச்சி முடிவு!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 15:37 | பார்வைகள் : 3366


திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு கணவரை விட மனைவி அதிகளவு வருவாயை ஈட்டுவது முக்கிய காரணமாக உள்ளது என  ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தேசிய மக்கள்தொகை ஆய்வு நிறுவனம் (Institut National d’Études Démographiques) ஆய்வு செய்து வெளியிட்டிருந்த அறிக்கையில் இது தெரிவியவந்துள்ளது. ”தம்பதியினரின் மொத்த வருவாயில் 55% சதவீதமானது பெண்கள் வருவாயாக இருந்தால், அத்தம்பதியினர் விவாகரத்துச் செய்ய 11 சதவீதம் அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.” முதன் முறையாக இந்த கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தனியே மனைவியின் வருவாயை மட்டும் நம்பி இருக்கும் குடும்பத்தினரிடம் 40% சதவீதமான விவாகரத்து வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 1, 2011 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பிரான்சில் 95,000 விவாகரத்துக்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்