Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில்  கொடூரச் சம்பவம் - 4 பேர் படுகொலை

ரொறன்ரோவில்  கொடூரச் சம்பவம் - 4 பேர் படுகொலை

2 ஐப்பசி 2024 புதன் 12:16 | பார்வைகள் : 1458


ரொறன்ரோவில் ஒரே நாளில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாண கோடீஸ் பகுதியில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்க பட்டு இருந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 33 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோட்டீஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.


இந்த மரணங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இரண்டு பெண்களினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.


சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிறுமி ஒருவர் இருந்ததாகவும் அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் நேற்றைய தினம் பதிவான நான்காவது படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களாக படுகொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்