Paristamil Navigation Paristamil advert login

ருவாண்டாவில்  பரவிவரும் புதியவகை தொற்று!

ருவாண்டாவில்  பரவிவரும் புதியவகை தொற்று!

2 ஐப்பசி 2024 புதன் 12:23 | பார்வைகள் : 2346


ருவாண்டா நாட்டில் மார்பர்க் எனப்படும் தொற்றும் தன்மை கொண்ட வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது.

ருவாண்டாவில் 30 மாவட்டங்களில், 7 மாவட்டங்களில் இதன் பரவல் காணப்படுவதாக அந்நாடு உறுதி செய்துள்ளது.

இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சை முறையோ இல்லை. 

இதன் பாதிப்பு ஏற்பட்ட நபர் ரத்த கசிவுடனான கூடிய காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவதுடன், 88 சதவீதம் அளவுக்கு மரண விகிதமும் உள்ளது. 

இது குறித்து ருவாண்டாவின் சுகாதார மந்திரி சபின் சன்சிமனா கூறும்போது,

பரவலை தடுத்து நிறுத்த உதவியாக, தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மற்றும் பரிசோதனை செய்தலை ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறிய அவர்,

அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

ருவாண்டாவில் மார்பர்க் வைரஸின் பரவலால் 8 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 

300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்