Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில்யாரெல்லாம் போட்டியாளர்கள்?

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில்யாரெல்லாம் போட்டியாளர்கள்?

9 புரட்டாசி 2024 திங்கள் 08:12 | பார்வைகள் : 1300


விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் சில போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ’பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண், டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலி ஜோயா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. மேலும் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர்களும் போட்டியாளர்களாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வரும் அக்ஷிதா போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் ரேஷ்மா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அதே சீரியலில் நடிக்கும் அக்‌ஷிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்