Drancy : தீப்பிடித்து எரிந்த கட்டிடம்.. ஒன்பது பேர் காயம்!!
10 புரட்டாசி 2024 செவ்வாய் 06:08 | பார்வைகள் : 2680
Drancy (Seine-Saint-Denis) நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று நேற்று நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது.
80 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் திடீரென தீ பரவியுள்ளது. அதை அடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அவர்களது பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீ அணைக்கப்பட்டது.
ஒன்பது பேர் மூச்சுத்திணறல் மற்றும் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.