உலகின் மிகபாரிய iPhone-ஐ உருவாக்கி உலக சாதனை படைத்த இந்திய வம்சாவளி யூடியூபர்
10 புரட்டாசி 2024 செவ்வாய் 09:30 | பார்வைகள் : 752
பிரித்தனையாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி யூடியூபர் ஒருவர் உலகின் மிகபாரிய iPhone-ஐ உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
ஆப்பிளின் தற்போதைய டாப்-எண்ட் மாடலான ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (), 6.7 அங்குல திரையைக் கொண்டுள்ளது.
ஆனால், இதன் 6.74 அடி நீளமுள்ள மாடலை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் தொழில்நுட்ப உள்ளடக்க படைப்பாளர் அருண் மைனி () உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இது கேஜெட் நிபுணர் மேத்யூ பெர்க்ஸுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இதில் கனமான கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதன் கேமிங் ஆப்கள் கூட பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதை ஸ்டாண்டில் ஏற்றி தெருக்களுக்கு எடுத்துச் சென்றபோது, அதைப் பார்த்த அனைவரும் பிரமித்துப் போனார்கள்.
இது உலகின் மிகப்பாரிய ஐபோன் பிரதி என்ற கின்னஸ் உலக சாதனையை கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் அருண், 'மிஸ்டர் ஹூஜ் தபாஸ்' என்ற யூடியூப் சேனல் மூலம் தொழில்நுட்ப தகவல்களை வழங்குகிறார்.