48 மணித்தியாலயத்தில் 5 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்த அமெரிக்க மாகாணம்
10 புரட்டாசி 2024 செவ்வாய் 09:26 | பார்வைகள் : 1459
அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இரண்டே நாட்களில் 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தின் Lake County சுற்றுவட்டாரப்பகுதியில் சனிக்கிழமை பகல் 4.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாள் மதியத்திற்கு மேல் 2.7 மற்றும் 2.8 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கலிபோர்னியாவின் தென்பகுதியில் இரண்டுமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதில் 3.9 என பதிவாகியுள்ளது. பொதுவாக கலிபோர்னியா வடபகுதியில் மாதம் குறைந்தது 50 முறை நிலநடுக்கம் பதிவாகி வருகிறது.
இந்த வார இறுதியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை Covelo பகுதியில் மதியம் 2.7 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இரவு சுமார் 10.52 மணிக்கு மீண்டும் 2.8 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட அடுத்த நாளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. முதலில் உள்ளூர் நேரப்படி காலை 10.05 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.5 என நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கமானது கனடாவின் ஒன்ராறியோவில் இருந்து தென்கிழக்கே 4.3 மைல் தொலைவில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 10.34 மணிக்கு ஏற்பட்டது. இதுவும் ஒன்ராறியோவில் இருந்து தென்கிழக்கே உருவானதாகவே கூறப்படுகிறது.
சனிக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அப்பகுதி முழுவதும் லட்சக்கணக்கானோர் உணர்ந்ததாகவே குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக 3.0 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் பதிவானால் மட்டுமே மக்களால் உணர முடியும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் நிலநடுக்கத்தின் ஆழம் மற்றும் ஏற்பட்ட பகுதியை பொறுத்து இது மாறுபடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மிக ஆழமான நிலநடுக்கம் என்பது பூமிக்குள் 400 மைல்கள் ஆழத்தில் உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
2024 ல் இதுவரை பல எண்ணிக்கையிலான நிலநடுக்கம் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில், மிக மோசமான நிலநடுக்கம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என்றே நிபுணர்கள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 7 என பதிவாகும் ஒரு நிலநடுக்கம் கலிபோர்னியாவில் 1,800 பேர்களின் மரணத்திற்கு காரணமாகலாம் என்றும், 50,000 மக்கள் காயங்களுடன் தப்பலாம் என்றும் சேதங்கள் 200 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.