செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் எப்போது? எலான் மஸ்க் வெளியிட்டுள்ள திட்டம்
11 புரட்டாசி 2024 புதன் 09:54 | பார்வைகள் : 1075
செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்திற்கான திட்டத்தை எலோன் மஸ்க் வெளியிட்டார்.
SpaceX நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், செவ்வாய்(Mars) கிரகத்தில் மனித குடியேற்றத்திற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இதற்கு முன்னதாக, மில்லியனர் முதலீட்டாளர் பில் ஆக்மன், சுகாதார திட்டங்களை முன்னுரிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஆக்மனின் சமீபத்திய X தள பதிவிற்கு பதிலளித்து இருந்த எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை பொருளாதார ரீதியாக சாத்தியமாக்கும் வகையில், மறுபயன்பாட்டிற்கான ஏவுகணை தொழில்நுட்பத்தில் SpaceX நிறுவனம் மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி பேசினார்.
எலான் மஸ்க் இது குறித்து கூறுகையில், தற்போது மார்ஸ் கிரகத்துக்கு ஒரு டன் சுமையை அனுப்புவதற்கான செலவு சுமார் $1 பில்லியன் ஆகும்.
குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சவால்கள் இருந்தாலும், அவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக எலான் மஸ்க் கூறினார்.
செவ்வாய் கிரகத்திற்கு முதல் மனிதனற்ற Starship விண்கலங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் ஏவப்படும் என்று மஸ்க் அறிவித்தார்.
வெற்றிகரமான தரையிறக்கங்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் கொண்ட விண்கலங்களை அனுப்ப வழி வகுக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், செவ்வாய் கிரகத்தில் சுயசார்பு நகரத்தை கட்டியெழுப்பும் இறுதி இலக்கு சுமார் 20 ஆண்டுகளில் எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
SpaceX நிறுவனம் Starship விண்கலத்தை பூமி சுற்றுப்பாதை, நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பால் மனிதர்கள் மற்றும் சரக்குகளை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட முற்றிலும் மறு பயன்பாட்டிற்கான போக்குவரத்து அமைப்பு என்று அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியத்தை SpaceX நிறுவனம் முன்னிலைப்படுத்தியுள்ளது.