Paristamil Navigation Paristamil advert login

இந்த குளிர் நிலை தற்காலிகமானது, மீண்டும் பருவநிலை மாறும்

இந்த குளிர் நிலை தற்காலிகமானது, மீண்டும் பருவநிலை மாறும்

12 புரட்டாசி 2024 வியாழன் 15:47 | பார்வைகள் : 5678


வழமைக்கு மாறாக இலையுதிர்காலத்துக்கு முந்திய கடும் குளிர் பருவம் ஒன்றை நாடு எதிர்கொண்டுள்ளது. பல பகுதிகளில் மழையும், பனியும் பதிவாகியுள்ளது, இவையனைத்தும் தற்காலிகமான நிலை. மீண்டும் வழமையான பருவநிலை மாற்றம் என Météo-France அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

பெரும் துருவக் கடற் குளிர் காற்று 'air plus frais d’origine polaire maritime' நாடெங்கும் பரந்து வீசுவதே தற்போதைய வெப்பநிலை வீழ்ச்சிக்குக் காரணம் என வானிலை அவதான நிலையம் Météo-France அறிவித்துள்ளது.

நாட்டின் தென் கிழக்குப் பகுதிகளில் மட்டுமே இந்த துருவக் கடற் குளிர் காற்று தாக்காத நிலையில் அந்த பகுதிகளில் மட்டும் 20°C வெப்பநிலை காணப்படுகிறது. இந்த நிலை வரும் சனிக்கிழமை மட்டுமே நீடிக்கும் எனவும் அதன் பின்னர் நாடு வழமையான பருவநிலைக்கு செல்லும் எனவும் வானிலை அவதான நிலையம் 'Météo-France' தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்