Paristamil Navigation Paristamil advert login

பிரிஜித் மக்ரோனை திருநங்கை என அவதூறு பரப்பிய இருவருக்கு குற்றப்பணம்!

பிரிஜித் மக்ரோனை திருநங்கை என அவதூறு பரப்பிய இருவருக்கு குற்றப்பணம்!

12 புரட்டாசி 2024 வியாழன் 15:27 | பார்வைகள் : 2481


முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என அவதூறு பரப்பிய இரு பெண்களுக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறையில் பணிபுரியும் இரு பெண்களும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூடியூப் தளமொன்றில் இது தொடர்பில் சில சர்ச்சைக் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். அதை அடுத்து பிரிஜித் மக்ரோனின் சகோதரர் ஒருவர் கடும் கோபம் கொண்டு இதனைக் கண்டித்ததுடன், அவர்கள் மீது வழக்கும் தொடுத்தனர்.

இந்நிலையில், செப்டம்பர் 12 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பிரிஜித் மக்ரோனுக்கு 8,000 யூரோக்கள் இழப்பீடும், வழக்கு தொடுத்த அவரது சகோதரருக்கு 5,000 யூரோக்களும் குற்றப்பணம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்