La Courneuve : 55,000 யூரோக்கள் பணத்துடன் ஒருவர் கைது!

18 புரட்டாசி 2024 புதன் 18:08 | பார்வைகள் : 9295
தமிழர்கள் செறிந்து வாழும் La Courneuve (Seine-Saint-Denis) பகுதியில் 55,000 யூரோக்கள் பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரணைகள் மேற்கொண்டனர். அதன்போது அவரிடம் 55,000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் Gennevilliers (Hauts-de-Seine) நகரில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்டது. அதன்போது அவரது வீட்டில் மூன்று கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து மீட்டனர்.