Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : குழு மோதல்.. வாள் வெட்டில் சிறுவன் படுகாயம்..!!

பரிஸ் : குழு மோதல்.. வாள் வெட்டில் சிறுவன் படுகாயம்..!!

18 புரட்டாசி 2024 புதன் 19:23 | பார்வைகள் : 2724


பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள இரு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட குழு மோதலில் 17 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று செப்டம்பர் 17, செவ்வாய்க்கிழமை மாலை 8.30 மணி அளவில் இந்த மோதல் Rue Wurtz வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. அருகருகே உள்ள இரு சிறு நகர்ப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன்போதே குறித்த சிறுவனுக்கு வாள் ஒன்றின் மூலம் தொடை மற்றும் முதுகு பகுதியில் வெட்டு இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது அவர்களில் பலஎ அங்கிருந்து தப்பி ஓடி மறைந்துள்ளனர். 

காயமடைந்த சிறுவன் Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். 

13 ஆம் வட்டாரத்தில் உள்ள Glacière மற்றும் Amiral-Mouchez எனும் இரு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே இந்த மோதல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்